நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி மீள்பார்வை
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

கண்ணோட்டம்

இலங்கையின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு கைத்தொழில் அமைதியும், இணக்கப்பாடும்

கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியன ஊடாக உற்பத்தித்திறனிலான தொழில் உறவுகளை விருத்தி செய்வதற்கும், பராமரிப்பதற்கும் முத்தரப்பு அங்கங்களை வசதிப்படுத்தல்

இலங்கை தொழில், தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் வேலைத்தல இணக்கப்பாட்டினை வசதிப்படுத்தும் குறிக்கோளுடன், முத்தரப்பு அங்கங்களுக்கு கல்வி, பயிற்சி, அறிவுரை மற்றும் ஆலோசனைச் சேவைகள் ஆகியவற்றை வழங்கும் நோக்கமொன்றுடன் தொழில்துறையின் உறுப்பொன்றாக 2007 செப்ரெம்பர் 11 அன்று தேசிய தொழில் கற்கைகள் நிறுவனம் தாபிக்கப்பட்டது.

2010இன் இல.12 தேசிய தொழில் கற்கைகள் நிறுவனச் சட்டத்தினால் இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் பாராளுமன்றத்தினால் நிறுவனம் சட்டபூர்வமாக ஒன்றிணைக்கப்பட்டதுடன், இது 2010 ஒக்ரோபர் 06 அன்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேற்படி சட்டத்தின் கீழ், இலங்கையில் தொழில் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர் மீது பாரப்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அவரினால் நியமிக்கப்பட்ட 'ஆளுனர் சபை' ஒன்றினால் நிறுவனம் நிருவகிக்கப்படுகின்றது.

சட்டத்தின் ஏற்பாடுகளின் படி நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற உத்தியோகத்தரான பணிப்பாளர் நாயகம் "ஆளுனர் சபையினால்" நேரத்திற்கு நேரம் ஒப்படைக்கப்படும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பொறுப்பினைக் கொண்டுள்ளார்.

நிறுவனத்தின் நோக்கங்களைச் சாதிக்குமுகமாக தேசிய தொழில் கற்கைகள் நிறுவனத்தினால் கவனத்திற்கெடுக்கப்படுகின்ற மூன்று பாரிய விடயத் துறைகளாக தொழில் சட்டம் மற்றும் கைத்தொழில் உறவுகள், மனித வள முகாமைத்துவம் அத்துடன் வேலைத்தல உற்பத்தித்திறன் ஆகியன விளங்குகின்றன. மூன்று வேறுபட்ட பிரிவுகளுக்கு பயிற்சிச் செயலமர்வுகள், குறுகிய கால பயிற்சிநெறிகள், சான்றுப்பத்திர மற்றும் டிப்ளோமா திட்டங்கள் போன்ற பலதரப்பட்ட சேவைகளும் பயிற்சிநெறிகளும் என மூன்று விடயத் துறைகள் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

அறிவுரை மற்றும் ஆலோசனைச் சேவைகளின் ஏற்பாடு மீதான குறிக்கோளைச் சாதிப்பதில் பலதரப்பட்ட உற்பத்தி மற்றும் சேவைத் துறை தாபனங்களுக்கு கூட்டுத் திட்டங்கள், மூலோபாயத் திட்டங்கள், செயல் திட்டங்கள், சாத்தியவள ஆய்வுகள், நிதிசார் மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைக் கையேடுகள் ஆகியவற்றை முழுமைப்படுத்துவதற்கு இட்டுச்செல்கின்ற ஆராய்ச்சியையும், ஆய்வுகளையும் நடத்துவதன் மூலம் பெருமளவு அரசாங்க மற்றும் கூட்டுத் துறைத் தாபனங்களுக்கு நிறுவனம் சேவையாற்றியுள்ளது.

சர்வதேச மட்டத்திற்கு அதன் செயற்பாடுகளை உயர்த்துவதற்காக சர்வதேச தொழில் தாபனம் (ILO) மற்றும் இந்தியாவின் வி.வி. கிரி தேசிய தொழில் நிறுவனம் போன்ற ஒரு சில சர்வதேசத் தாபனங்களுடன் தேசிய தொழில் கற்கைகள் நிறுவனம் இணைந்துள்ளது.

ஆசியாவில் அதன் நிபுணத்துவத் துறைகளில் மிகவும் மதிப்புவாய்ந்த நிறுவனமாக விளங்குவதை தேசிய தொழில் கற்கைகள் நிறுவனமும் முன்னோக்கிப் பார்க்கின்றது.

 NILS ஆல் வழங்கப்படும் சேவைகள்

தொடர்புகளுக்கு